தன்னை விட 15 வயது இளைய நட்சத்திரத்தை மணக்கத் துடிக்கும் நடிகை
திரை உலகின் பரபரப்பு:
15 வயது இளைய காதலரை மணக்கத் துடிக்கும் முன்னணி நடிகை!
தமிழ், தெலுங்கு, கன்னட திரையுலகில் ஒரு காலத்தில் அசைக்க முடியாத முன்னணி நாயகியாக வலம் வந்தவர். அவரது அழகும், நடிப்புத் திறமையும் ரசிகர்களைக் கட்டிப் போட்டன. இன்று, அதே நடிகை மீண்டும் கிசுகிசுக்களின் மையப்புள்ளியாக மாறியிருக்கிறார். காரணம்? தன்னைவிட 15 வயது குறைந்த இளம் நடிகருடனான தீராத காதல்
இந்த நடிகை, வெறும் 20 வயதிலேயே திருமணம் செய்து கொண்டவர். ஆனால், அந்தத் திருமணம் சில ஆண்டுகளிலேயே முறிந்தது. கணவரின் சந்தேக புத்திதான் இதற்குக் காரணம். "சினிமாவில் படுக்கை அறை காட்சிகளில் நடிக்கிறாய், நிஜத்திலும் நடிகர்களுடன் அப்படித்தான் இருப்பியா?" என கணவர் கேள்வி எழுப்பி, மன உளைச்சலை ஏற்படுத்தியதாக நடிகை நீதிமன்றத்தில் பகிர்ந்தார். இந்தக் கொடூரமான அனுபவம் அவரை நிலைகுலையச் செய்தது. இதனால், கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து பெற்று, குழந்தைகள் இல்லாமல் தனித்து வாழ்ந்து வருகிறார்
சினிமாவில் உச்சத்தில் இருந்தபோது, இந்த நடிகை தனது வருமானத்தை புத்திசாலித்தனமாக முதலீடு செய்தார். நிலங்கள், நகரின் மையப் பகுதிகளில் கடைகள், வீடுகள் என அசையா சொத்துக்களில் முதலீடு செய்து, இன்று பல மடங்கு லாபம் ஈட்டியிருக்கிறார். தற்போது சிறு பட்ஜெட் படங்களைத் தயாரித்து வருகிறார். இவரது தயாரிப்புப் படங்களில் அந்த இளம் நடிகருக்கு வாய்ப்பு அதிகம் என்பது கூடுதல் சிறப்பு
இந்த நடிகையின் வாழ்க்கையில் தற்போது புதிய திருப்பமாக அமைந்திருப்பது, தன்னைவிட 15 வயது குறைந்த ஒரு இளம் நடிகருடனான காதல். இவர்கள் இருவரும் அடிக்கடி வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்வது, படப்பிடிப்பு முடிந்ததும் காரில் ஜோடியாகப் பயணிப்பது என காதல் பறவைகளாகப் பறந்து வருகின்றனர். இவர்களது நெருக்கமான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக, கிசுகிசுக்களுக்குத் தீனி போடுகின்றன.
ஆனால், இந்தக் காதலுக்கு மிகப்பெரிய தடையாக இருப்பது, இளம் நடிகரின் குடும்பத்தினரின் ஒப்புதல். நடிகைக்கு இன்னும் குழந்தைகள் இல்லை என்றாலும், வயது வித்தியாசம் இந்த உறவுக்கு சவாலாக உள்ளது. இளம் நடிகரின் குடும்பம், இந்த முன்னணி நடிகையை மருமகளாக ஏற்கத் தயாராக இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
.png)
Post a Comment