"நீ கிளாமராக நடிக்க வேண்டும் என்றால், அப்படிப்பட்ட படம் எடுப்பவர்களிடம் போ" எனக் கோபமாகக் கத்திய இயக்குனர்
பக்கத்து மாநிலத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த நடிகை, முன்னணி நடிகையாக வலம் வர வேண்டும் என்பதற்காகப் பல விஷயங்களைச் செய்துள்ளார். தமிழ் சினிமாவுக்கு வந்த சில ஆண்டுகளுக்குள்ளாகவே ஒரு நடிகருடன் நெருங்கிப் பழகி, வீக் எண்டுகளில் பார்ட்டி, ஹோட்டல் என செம ஜாலியாக இருந்துள்ளார்.
பின்னர் சில காரணங்களால் அவரைப் பிரிந்த நடிகை, திருமணம் ஆன ஒரு இயக்குனருடன் டேட் செய்து வந்துள்ளார். "டைவர்ஸ் செய்துவிட்டு வாருங்கள், நாம் சேர்ந்து வாழலாம்" என நடிகை போட்ட நிபந்தனைக்கு முதலில் சம்மதித்த அந்த இயக்குனர், பிறகு நடிகையை கழற்றி விட்டுவிட்டாராம். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் இருந்த நடிகைக்கு, அப்போது மற்றொருவர் துணையாக வந்ததாகவும், இப்போது அவருடன் சேர்ந்து வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
ஆரம்பகால கிளாமர் ஆசை:
ஆரம்ப காலத்தில் வாய்ப்புகளுக்காகக் காத்திருந்த போது, ஒரு பெரிய நடிகரின் படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படம் சூப்பர் ஹிட்டாகி பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. படத்தில் இவருக்கு ஹோம்லியான உடைகள் மட்டுமே வழங்கப்பட்டதால், ஒருமுறை படப்பிடிப்பு தளத்திற்கு ஹாலிவுட் அளவுக்கு கவர்ச்சியான உடையில் வந்துள்ளார். இதைப்பார்த்த இயக்குனர் அதிர்ச்சியடைந்து, "என்னம்மா இப்படி வந்திருக்கிறாய்?" எனக் கேட்டுள்ளார். அதற்கு நடிகை, "படம் முழுவதும் என்னை ஹோம்லியாகவே காட்டுகிறீர்கள். நான் மக்கள் மத்தியில் ரீச் ஆக வேண்டுமென்றால் கிளாமராக சில காட்சிகள் இருந்தால்தான் நன்றாக இருக்கும்" எனக் கூறியுள்ளார்.
இதனால் கோபமடைந்த இயக்குனர், "நீ கிளாமராகத்தான் நடிக்க வேண்டும் என்றால், அப்படிப்பட்ட படம் எடுப்பவர்களிடம் போ. என் படத்தில் அதற்கு இடமில்லை" எனக் கோபமாகக் கத்தியுள்ளார். அதன்பின்னர் உதவி இயக்குனர்கள் அருகில் உள்ள கடைக்குச் சென்று துணிகளை வாங்கி வந்து நடிகையை அணியச் சொல்லி படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். அந்தப் படத்திற்குப் பிறகு அந்த இயக்குனர் பல வெற்றிப் படங்களைக் கொடுத்தாலும், ஒரு படத்தில் கூட இந்த நடிகையை மீண்டும் சேர்க்கவில்லை.
.png)


Post a Comment