படுக்கைக்கு அழைத்த முக்கிய புள்ளி.. நடிகையின் அதிரடி

 கோலிவுட் முதல் பாலிவுட் வரை நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் அட்ஜஸ்ட்மென்ட் கலாச்சாரம் தலைவிரித்தாடுவது ஒன்றும் புதிதல்ல. ஆனால், "பட வாய்ப்புக்காக படுக்கையைப் பகிர்ந்துகொள்ளுங்கள்" என்று கூறிய ஒரு முக்கிய புள்ளியின் கன்னத்தில் பளார் என அறைந்து, தன்மானத்தைக் காப்பாற்றிக்கொண்ட ஒரு இளம் நடிகையின் துணிச்சலான செயல் தற்போது கோடம்பாக்கத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. இந்த ரகசியத்தை பிரபல நடிகர் போட்டு உடைத்துள்ளது, திரையுலகில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.




சமீபத்தில், வளர்ந்து வரும் ஒரு இளம் நடிகை, பெரிய பட்ஜெட் படம் ஒன்றில் நடிப்பதற்காக அதன் தயாரிப்பாளரைச் சந்திக்கச் சென்றுள்ளார். படத்தின் கதை மற்றும் தனது கதாபாத்திரம் குறித்துப் பேசி முடித்த பிறகு, அந்த தயாரிப்பாளர், நடிகையிடம் அட்ஜஸ்ட்மென்ட் குறித்துப் பேச்சை ஆரம்பித்துள்ளார். "இந்தப் படத்தில் நீதான் கதாநாயகி. ஆனால், அதற்கு நீ சில விஷயங்களுக்கு 'ஒத்துழைக்க' வேண்டும்" என்று நேரடியாகவே கேட்டுள்ளார்.


இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த நடிகை, ஒரு நிமிடம் கூட யோசிக்காமல், அந்த தயாரிப்பாளரின் கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார். "என் திறமைக்கு வாய்ப்பு கிடைத்தால் போதும். இது போன்ற அசிங்கமான வேலைகளுக்கு நான் வரமாட்டேன்" என்று முகத்தில் அடித்தாற்போல் கூறிவிட்டு, அந்த இடத்தை விட்டு வெளியேறியுள்ளார்.



இந்த சம்பவத்தை நடிகர் ஒருவர் சமீபத்திய  பேட்டி ஒன்றில் அம்பலப்படுத்தியுள்ளார் . அவர் கூறியதாவது, "திரையுலகில் இது போன்ற சம்பவங்கள் சர்வ சாதாரணமாக நடக்கின்றன. ஆனால், இந்த நடிகை காட்டிய துணிச்சல் அபாரமானது. அந்த தயாரிப்பாளர் ஒரு மிகப்பெரிய புள்ளி. அவரை எதிர்த்து நிற்பது சாதாரண விஷயமல்ல. ஆனால், தன்மானம்தான் முக்கியம் என்று அந்த நடிகை எடுத்த முடிவு, மற்ற நடிகைகளுக்கு ஒரு மிகப்பெரிய முன்னுதாரணம்" என்று கூறியுள்ளார்.


மேலும், அந்த நடிகையின் பெயரை வெளியிட விரும்பவில்லை என்றாலும், அவருடைய தைரியத்தை மனதாரப் பாராட்டுவதாகவும், இது போன்ற ஓநாய்களிடமிருந்து மற்ற நடிகைகளும் தங்களைக் காத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.



இந்தத் தகவலை வெளியிட்டதிலிருந்து, கோலிவுட் வட்டாரத்தில் ஒரே பரபரப்பு நிலவி வருகிறது. "யாராக இருக்கும் அந்த தைரியமான நடிகை?", "யார் அந்த தயாரிப்பாளர்?" என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் விவாதங்களை ஆரம்பித்துள்ளனர். சில முன்னணி நடிகைகளின் பெயர்களும், தயாரிப்பாளர்களின் பெயர்களும் யூகங்களின் அடிப்படையில் வலம் வந்துகொண்டிருக்கின்றன.

No comments

Powered by Blogger.