இந்த வயசுக்கு அப்புறம் தான் ஆசை அதிகமாகும்!" - கூச்சமில்லாமல் பேசிய வித்யா பாலன்!

பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலன், பெண்களின் உடலுறவு ஆசை மற்றும் உடல் குறித்த புரிதல் பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் வெளிப்படையாகப் பேசியுள்ளார். "40 வயதில் தான் பெண்களுக்கு உடலுறவின் மீது உண்மையான ஈடுபாடும், விருப்பமும் அதிகமாகிறது," என்று அவர் கூறியுள்ளது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.



பெரும்பாலானோர், இளமைப் பருவத்தில் தான் பெண்கள் அதிக கவர்ச்சியாகவும், துடிப்பாகவும் உணர்வார்கள் என்று நினைக்கிறார்கள். ஆனால், வித்யா பாலன் இதை மறுத்துள்ளார். "40 வயதைத் தாண்டிய பிறகுதான் பெண்கள் தங்களை அதிக கவர்ச்சியாகவும், சுதந்திரமாகவும் உணர்கிறார்கள். அப்போதுதான் அவர்கள் தங்கள் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள்," என்று அவர் அழுத்தமாகத் தெரிவித்தார்.


ஏன் 40 வயதில் ஆசை அதிகமாகிறது?


வித்யா பாலன் இதற்கான காரணத்தையும் தெளிவாக விளக்கினார்.


பொறுப்புகள் குறைவு:

40 வயதுக்குப் பிறகு பெண்களின் குடும்பப் பொறுப்புகள் பெரும்பாலும் குறைந்திருக்கும். குழந்தைகளைப் பற்றிய கவலைகள், அவர்களின் கல்வி எனப் பல கடமைகளில் பெரும் பகுதியைக் கடந்திருப்பார்கள்.


மனத்தெளிவு: 

இளமைக் காலத்தில் இருந்த தயக்கம், பயம் போன்ற உணர்வுகள் இந்த வயதில் மறைந்துவிடுகின்றன. "30 வயதில் தான் நான் யார், என் வாழ்க்கை எதற்காக இருக்கிறது என்று புரிந்தது. என் வாழ்க்கையை நேசிக்க ஆரம்பித்தேன்," என்று வித்யா பாலன் கூறினார்.


பரிச்சயம்: 

40 வயதில், கணவருடன் குறைந்தபட்சம் 15 வருடங்களாகப் பழகியிருப்பார்கள். இந்த நீண்ட கால உறவில், ஒருவருக்கொருவர் முழுமையாகப் புரிந்து கொண்டிருப்பார்கள். இதனால், எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் தங்கள் விருப்பங்களை வெளிப்படுத்த முடியும்.


நம்பிக்கை: 

"என் 20 வயதில் நான் என்னவெல்லாம் கற்பனை செய்தேனோ, கனவு கண்டேனோ, அதையெல்லாம் இப்போதுதான் அனுபவிக்கிறேன். என்னைப் போலவே பல பெண்களும் குடும்பப் பொறுப்புகள், ஆரம்பகால பயம் போன்ற காரணங்களால் தங்கள் இளமையைக் கடந்து வந்துவிடுகிறார்கள். 40 வயதில் தான் அவர்களுக்கு ஒரு தெளிவும், தன்னம்பிக்கையும் கிடைக்கிறது," என்று அவர் விளக்கினார்.

No comments

Powered by Blogger.