கவர்ச்சியில் எல்லை மீறிய நடிகை! பட வாய்ப்புக்காக இப்படியா?

 திரைத்துறையில் வாய்ப்புகள் கிடைக்காமல் போகும்போது, பல நடிகைகள் கையில் எடுக்கும் அஸ்திரம் சோஷியல் மீடியா. ஆம், கலக்கல் போட்டோக்களும், கவர்ச்சியான வீடியோக்களும் தான் அவர்களுக்கு புதிய பட வாய்ப்புகளை பெற்றுத்தரும் ஆயுதமாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த ஃபார்முலா சிலருக்கு மட்டுமே கைகொடுக்கிறது; பலரின் கனவுகளை உடைத்து விடுகிறது.



இப்போது, இந்த களத்தில் குதித்திருக்கிறார் ஒரு இளம் நடிகை. ஒரு மாஸ் நடிகரின் படத்தில் எப்படியாவது நடித்துவிட வேண்டும் என கடுமையாக முயற்சி செய்தார். ஆனால், அவரது கனவுகள் கலைந்து போனதுதான் மிச்சம். ஏமாற்றத்துடன் இருந்த அவர், தற்போது தனது பாதையை மாற்றியுள்ளார்.


சமீபத்தில் அவர் வெளியிட்ட அரைகுறை ஆடை வீடியோ ரசிகர்களை மட்டுமல்ல, திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. "இப்படி இறங்கிட்டாங்களே!" என பலரையும் பேச வைத்திருக்கிறது அந்த வீடியோ.


சில வருடங்களுக்கு முன்பு, இதேபோன்ற ஒரு உத்தியை ஒரு நடிகை கையாண்டார். விடியற்காலையில் கவர்ச்சிப் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்தார். அதன் பலனாக அவருக்கு சில பட வாய்ப்புகளும் கிடைத்தன. ஆனால், அதன் பிறகு தயாரிப்பாளர்களோ, இயக்குநர்களோ அவரை கண்டுகொள்ளவில்லை. இறுதியில், சினிமா வாய்ப்புகள் இல்லாமல் மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு அவர் பறந்துவிட்டார்.


இந்த நடிகையும் அதே பாதையில் பயணிக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை, இந்த கவர்ச்சி ரூட் அவருக்கு கைகொடுக்குமா, அல்லது அந்த நடிகைக்கு ஏற்பட்ட நிலைதான் இவருக்கும் ஏற்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

No comments

Powered by Blogger.