அரசியல்வாதியுடன் நடிகை எஸ்கேப்! இயக்குனரின் ஒரு வார ஷூட்டிங் ரத்து

 கோலிவுட்டில் பெரும் பரபரப்பு! இளம் நடிகை ஒருவர் அரசியல் பிரபலத்துடன் எஸ்கேப் ஆனதால், ஒரு வார படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக கிசுகிசுக்கள் எழுந்துள்ளன. இயக்குனரின் கனவு தகர்ந்து போயுள்ளதாகவும், தயாரிப்பாளர் நெருக்கடியால் அவர் கண்ணீர் விட்டு அழுவதாகவும் கூறப்படுகிறது.




பார்ட்டியில் கும்மாளம்!


பாண்டிச்சேரியில் தனது நண்பர்களுடன் பப் ஒன்றில் குடித்து கும்மாளம் போட்டுக் கொண்டிருந்த நடிகையை, அரசியல் பிரபலம் ஒருவர் அடம்பிடித்து தனது காரில் ஏற்றிக்கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனால், ஒரு வாரத்துக்கு நடிகையின் டேட்ஸ் மொத்தமும் வீணாகிவிட்டதாக இளம் இயக்குனர் புலம்பி வருகிறார்.



இன்ஸ்டாகிராம் கவர்ச்சி!


இன்ஸ்டாகிராமில் ஏகப்பட்ட கவர்ச்சி புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு இளைஞர்கள் மத்தியில் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தையே வைத்திருக்கும் அந்த யங் ஹீரோயினை தனது படத்தில் கமிட் செய்து இயக்கி வருகிறார் அந்த இயக்குனர். ஆனால், அரசியல் பிரபலத்துடன் தகாத முறையில் தொடர்பு கொண்டிருக்கிறார் அந்த நடிகை என்பது அவருக்கு தெரியவில்லை.


போனை ஸ்விட்ச் ஆஃப்!


பார்ட்டிக்கு நடிகை சென்ற இடத்தில் அரசியல் பிரபலம் திடீரென ஒரு வாரத்துக்கு அந்த நடிகை வேண்டுமென கேட்க, சினிமா சம்பளத்தை விட டபுள் மடங்கு கிடைத்துவிடும் என்பதற்காக போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டு நடிகை கிளம்பி விட்டாராம்.


இயக்குனரின் புலம்பல்!


பல நடிகர்களை வைத்து படமெடுத்து வரும் இயக்குனர், திடீரென படத்தின் ஹீரோயினே மிஸ்ஸிங் என்றால் மற்றவர்களை வைத்து எப்படி படம் எடுப்பது என்றும், மீண்டும் நடிகை வந்த பிறகு அனைத்து ஆர்ட்டிஸ்ட் காம்பினேஷனை எப்படி சேர்ப்பது என புரியாமல் ஒரு வாரம் பொழப்பு போச்சு என புலம்பிக் கொண்டு சில நடிகர்களுக்கு அடுத்த வாரம் வாங்க என்றே தகவல் சொல்லிவிட்டாராம். நடிகைக்கு தொடர்ந்து போன் அடித்து பார்த்தும் அவரது சைடில் இருந்து எந்தவொரு ரெஸ்பான்ஸும் வராத நிலையில், கடுப்பான இயக்குனர் ஹீரோயினையே மாற்றிவிடலாமா என்கிற முடிவுக்கும் சென்றுவிட்டதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.


தயாரிப்பாளரின் நெருக்கடி!


நடிகை அரசியல் பிரபலத்துடன் மஜா பண்ண கிளம்பிச் சென்றதை அவரது நண்பர்கள் மூலம் அறிந்துக் கொண்ட இயக்குனர், இந்த விஷயத்தை தயாரிப்பாளரிடம் எப்படி சொல்வது என தயங்கிக் கொண்டிருந்த நிலையில், படப்பிடிப்பு ரத்தான தகவல்களை மேனேஜர் போட்டு கொடுத்துவிட, என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ எனக்கு தெரியாது, மற்ற நடிகர்களை வைத்தாவது ஷூட்டிங்கை நடத்து, மறுபடியும் ஆர்ட்டிஸ்ட்டுக்கு என்னால் சம்பளம் கொடுக்க முடியாது. அந்த நடிகை தான் வேண்டும் என அடம்பிடித்து தானே புக் பண்ண எப்படியாவது போய் கூட்டிட்டு வந்து நடிக்க வை என தயாரிப்பாளர் இன்னொரு பக்கம் நெருக்கடி கொடுத்து வருவதால் இயக்குனர் அழுது புலம்பி வருகிறாராம்.


இந்த சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை என்ன சொல்லப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்

No comments

Powered by Blogger.