“உனக்கு ரூ. 25 லட்சம் தாரேன்.. இப்பவே கிளம்பி நான் சொல்ற பார்ம்ஹவுஸுக்கு வா!”


சமூக வலைத்தளங்களில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கும் அந்தப் பிரபலத்திற்கு, நள்ளிரவில் அடையாளம் தெரியாத எண்ணில் இருந்து ஒரு அழைப்பு வந்துள்ளது. மறுமுனையில் பேசிய நபர், எடுத்தவுடனேயே சுற்றியவளைக்காமல் நேரடியாக விஷயத்திற்கு வந்துள்ளார்.


"என்னோடு அட்ஜஸ்ட் செய்ய சம்மதித்தால், உடனடியாக 25 லட்ச ரூபாய் கைமாறும்... இப்போதே ஃபார்ம்ஹவுஸுக்கு கிளம்பி வாருங்கள்" என்று ஆசைவார்த்தை கூறி, ஆபாசமாகப் பேசியுள்ளார்.


இதைக்கேட்டு அதிர்ச்சியில் உறைந்துபோன அந்த பிரபலம், அந்த நபரைக் கடுமையாக எச்சரித்துக் போனை வைத்துள்ளார். ஆனாலும், விடாமல் அடுத்தடுத்து வந்த மெசேஜ்களாலும், தொடர் தொல்லைகளாலும் மனதளவில் கடுமையாக உடைந்து போயுள்ளார்.



"நொந்துபோன பிக்பாஸ் பிரபலம்!"

பணத்தைக் காட்டி தங்களை என்ன வேண்டுமானாலும் செய்துவிடலாம் என நினைக்கும் இதுபோன்ற மனிதர்களால், தங்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகக் கண்ணீருடன் அவர் வேதனை தெரிவித்துள்ளார். மேலும், அந்த மர்ம நபரின் மொபைல் எண்களை ஆதாரங்களுடன் சைபர் க்ரைம் போலீசாரிடம் ஒப்படைத்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் அவர் தீவிரம் காட்டி வருகிறார்.


சினிமா மற்றும் சின்னத்திரை வட்டாரங்களில் புயலைக் கிளப்பியுள்ள இந்த "ஃபார்ம்ஹவுஸ் விவகாரம்" தான், தற்போது சோசியல் மீடியாவின் ஹாட் டாபிக்!

No comments

Powered by Blogger.