நடிகையின் காதலை உடைத்த ரோஸ் மில்க்! நடிகை வேதனை!
கோலிவுட்டில் பரபரப்பான கிசுகிசு! முன்னணி நடிகை ஒருவரின் காதல் வாழ்க்கை, திருமண பேச்சு வந்தாலே முறிந்து போகும் சோக கதையாக மாறி வருகிறது. நடிகையை காதலிக்கும் நடிகர்கள், திருமண பேச்சு வந்தாலே கம்பியை நீட்டி விடுகின்றனர் என்று சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
நடிகர்களை காதலிக்கும் முன்னணி நடிகைகள் பலரும், திடீரென ஒரு கட்டத்தில் பிரேக்கப் செய்து பிரிந்து செல்லும் நிலை தான் ஏற்படுகிறது. ஒரு சில சினிமா பிரபலங்கள் மட்டுமே உண்மையாக காதலித்து, காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு கடைசி வரை வாழ்ந்து வருகின்றனர். ஆனால், இன்றைய அவசர காலத்தில் காதலுக்கு எல்லாம் மரியாதை இல்லாமல் போய்விட்டது என்றும் காஜிக்குத்தான் பலரும் அலைவதாக கிசுகிசுக்கள் எழுந்துள்ளன.
நடிகையை சில ஆண்டுகளாக நன்றாக பயன்படுத்தி விட்டு, தற்போது போரடித்து விட்டதால், இன்னொரு இளம் நடிகையுடன் ரகசியமாக அந்த நடிகர் தொடர்பில் இருப்பது தெரிய வந்ததும், நடிகை காதலரை விட்டு கண்ணீருடன் பிரிந்து விட்டார் என்று சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. பால் மேனி நடிகையை பார்த்ததும் அந்த நடிகருக்கு ஃபயர் பற்றிக் கொண்டது. அதிலும், நடிகையுடன் உச்சகட்ட காட்சியில் நடிக்க அல்வா போல சான்ஸ் கிடைத்ததும், நடிகையும் தாராளமாக நடிகருடன் இணைந்து கெமிஸ்ட்ரியை வொர்க்கவுட் செய்ய, இருவருக்கும் மனதளவில் சில விஷயங்கள் ஒத்துப்போக, இருவரும் சில ஆண்டுகள் ஒன்றாக இருந்தனர். ஆனால், தற்போது இளம் நடிகை ரோஸ் மில்க் பேபியுடன் நடிகருக்கு ஏற்பட்டுள்ள ரகசிய காதல் நடிகைக்கு தெரிந்ததும் தான் பிரச்சனை வெடித்தது என்கின்றனர்.
நடிகையை காதலர் ஏமாற்றி வருகிறார் என்கிற சேதியை நடிகருக்கு பிடிக்காத சிலர், நடிகையின் காதுகளில் விழும்படி கொளுத்திப்போட, நடிகை காதலர் தன்னை ஏமாற்றுகிறாரா இல்லையா என்பதை சோதிக்க, திருமணம் செய்துக் கொள்ளலாம் என டார்ச்சர் கொடுக்க ஆரம்பித்துவிட்டாராம். ஆனால், இப்போதைக்கு வேண்டாம் என கடந்த சில மாதங்களாக நடிகர் தள்ளிப்போட்டுக் கொண்டிருக்க, நடிகை கார்னர் செய்ததும், இது செட்டாகாது என நடிகையை அந்த நடிகர் கழட்டிவிட்டு விட்டதாக கிசுகிசுக்கள் கிளம்பியுள்ளன.
ஏற்கனவே முதல் காதலரும் இப்படித்தான் திருமண பேச்சை எடுத்ததும் அப்பாவுக்கு பயந்துவிட்டு நடிகையை கழட்டிவிட்டு எஸ்கேப் ஆனார். இப்போது ரொம்பவே நம்பிக்கையாக இருந்த காதலரும் மோசம் செய்துவிட்டாரே என ரூமை பூட்டிக் கொண்டு 2 நாட்கள் ஷூட்டிங் ஏதும் போகாமல் நடிகை கதறி அழுததாகவும் பேச்சுக்கள் புகைந்து வருகின்றன.
இந்த காதல் முறிவு, சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை என்ன சொல்லப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Post a Comment