நள்ளிரவு சாட்டிங்... அடங்காத சந்தேகம்: போர்வையை போர்த்திப் பேசிய மனைவி

 நள்ளிரவு சாட்டிங்... அடங்காத சந்தேகம்: போர்வையை போர்த்திப் பேசிய மனைவியின் கழுத்தை சார்ஜர் ஒயரால் இறுக்கி, கத்தியால் அறுத்த மெக்கானிக் கணவன்! புதுச்சேரியில் பயங்கரம்!


செல்போன் மோகமும், அதனால் ஏற்படும் அதீத சந்தேகமும் ஒரு அழகான காதல் வாழ்க்கையை எப்படி ரத்தக் கறையாக மாற்றுகிறது என்பதற்குப் புதுச்சேரியில் அரங்கேறியுள்ள இந்தத் துயரச் சம்பவமே சாட்சி! அதிக நேரம் சாட்டிங் செய்த மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவன், பெற்ற குழந்தை என்றும் பாராமல் தன் மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் ஒட்டுமொத்தப் புதுச்சேரியையும் அதிரவைத்துள்ளது.



விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தைச் சேர்ந்த ஏழுமலை என்கிற சூர்யா (24). இருசக்கர வாகன மெக்கானிக்கான இவரும், புதுச்சேரி மூலக்குளத்தைச் சேர்ந்த சுவேதாவும் (21) காதலித்து, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்புதான் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 3 வயதில் ஒரு அழகான பெண் குழந்தையும் இருக்கிறது.


புதுச்சேரி லாஸ்பேட்டை தொகுதிக்குட்பட்ட ஜீவானந்தபுரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்த இந்த இளம் தம்பதியின் மகிழ்ச்சியான வாழ்க்கையில், ‘செல்போன்’ புயலாக நுழைந்தது.


சுவேதா எப்போதும் செல்போனிலேயே மூழ்கிக் கிடப்பது, அதிக நேரம் யாருடனோ ரகசியமாகப் பேசுவது மற்றும் சாட்டிங் செய்வதை சூர்யா கவனித்துள்ளார். இதனால் சுவேதாவின் நடத்தையின் மீது சூர்யாவுக்குக் கடுமையான சந்தேகம் எழுந்துள்ளது.


சுவேதாவை செல்போன் பயன்படுத்தக் கூடாது என சூர்யா பலமுறை கண்டித்துள்ளார்.


ஆனால், கணவனின் தடையைப் பொருட்படுத்தாமல் சுவேதா தொடர்ந்து போனைப் பயன்படுத்தி வந்ததால், இருவருக்கும் இடையே தினமும் வீட்டில் சண்டை வெடித்து, நரகமாக மாறியுள்ளது.


போர்வைக்குள் தெரிந்த மொபைல் வெளிச்சம்... நரகமாக மாறிய காலைப் பொழுது!

இன்று காலை சூர்யா தூங்கி எழுந்தபோது, அங்கே கண்ட காட்சி அவரது கோபத்தை உச்சிக்குக் கொண்டு சென்றது. விடிந்தும் விடியாத அந்தப் பொழுதில், சுவேதா போர்வையைப் போர்த்திக்கொண்டு யாருக்கோ ரகசியமாக மெசேஜ் அனுப்பிக் கொண்டிருந்துள்ளார்.


இதப் பார்த்ததும் சூர்யா கத்த, இருவருக்கும் இடையே பயங்கர வாக்குவாதம் வெடித்தது. சுவேதாவிடம் இருந்து போனைப் பிடுங்க முயன்றபோது சண்டை முற்றவே, சூர்யாவின் தலைக்குக் காம வெறியும் ஆத்திரமும் ஏறியது!


ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற சூர்யா, அருகில் இருந்த செல்போன் சார்ஜர் ஒயரை எடுத்து சுவேதாவின் கழுத்தில் மாட்டி, மூச்சு முட்டும் அளவுக்குக் கொடூரமாக இறுக்கியுள்ளார். சுவேதா உயிருக்காகப் போராடி, கணவனிடம் இருந்து தப்பிக்க மல்லுக்கட்டியுள்ளார். ஆனால், இரக்கமற்ற சூர்யா, தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து சுவேதாவின் கழுத்தை ஓங்கி அறுத்துள்ளார். ரத்த வெள்ளத்தில் சுவேதா துடிதுடித்துக் கீழே விழ, அலறல் சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் சூர்யா அங்கிருந்து தப்பியோடிவிட்டார்!


அக்கம்பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது, சுவேதா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடியாக தன்வந்திரி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.


சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சுவேதாவின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய கொடூரக் கணவன் சூர்யாவை (ஏழுமலை) கைது செய்யப் போலீசார் தீவிரமாக வலைவீசித் தேடி வருகின்றனர்.


காதலித்துக் கைப்பிடித்த மனைவியை, செல்போன் சந்தேகத்தால் கணவனே கொடூரமாகக் கொன்ற இந்தச் சம்பவம் புதுச்சேரி மக்களிடையே பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது!

No comments

Powered by Blogger.